|
Sillalai - A Little Heaven:
Nestling in the north of Sri Lanka, to the north west of Jaffna
along the shores of the Indian Ocean is the beautiful
village of Sillalai – often called “Little Rome”.
It is surrounded by the villages Mathagal, Pandattarippu
and Chulipuram and is blessed by an abundance of natural
vegetation. Coconut and palmyra groves, fertile paddy
fields, jack, areca nut, mango and a variety of fruit
trees make it a garden of Eden. Vegetables, onion and
chilli plantations add to its richness. The two main
religions practised here are Christianity and Hinduism.
The chief occupations of the villages are farming and
fishing.
In 1687 the blessed Joseph Vaz first set foot on its soil
seeking refuge from persecution, in the guise of a
beggar. The dwellers of the village gave him asylum
and with his guidance began their spiritual pilgrimage.
He was their first parish priest and today the 1st saint
of Sri Lanka to be declared “Blessed”.
Sillalai can truly he called “Little Rome” for it has
produced over 34 priests, over 40 religious sisters, 10
lay-apostles, not to speak of a Catholic prelate –
Bishop Rt. Rev. Anthony Selvanayagam of Malaysia, from among its
Catholic population. Rising majestically over the
landscape of Sillalai is the church of our Lady and
patroness of the village – “The Madonna of the Chair”,
also known as “Our Lady of Remedies”. The feast of
the assumption on the 15th of August is celebrated with
great pomp and ceremony. Highlights of the festival are
a concelebrated mass, novenas, procession with the
statue, the chanting of traditional hymns to the ringing
of festive bells and almsgiving ceremony.
The culture and tradition of Sillalai is rich and varied.
Poets, dramatists, sculptors, and folk singers have
brought Sillalai great renown down the ages. Among them
“Sillaiyoor Selvarajan” stands out as a literary star who
brought Sillalai international fame in recent times.
Sillalai has won world wide recognition as a centre of Siddha
Ayurvedic medicine and its generations of physicians.
Drs. Innasithamby and Athanasiyar
are household names not only in Sri Lanka, but abroad as
well. The curative effects of their treatment have given
Sillalai a reputation for restoring the health of
patients given up as hopeless.
The inhabitants of Sillalai have made their mark in all
fields of education. Its sons and daughters adorn the
departments of medicine, engineering, law, accountancy,
arts and computer science in Sri Lanka, and abroad today
our beloved village bears the scars and ravages of war.
It exhibits all the ordeals it has gone through. Ruined
buildings, dense jungle, overgrown shrubbery, damaged
roads and houses make this once famed paradise a wartorn spectacle.
Its people are displaced and scattered
in the Wanni and in alien Lands while its youth lay down
their lives for their Land.
சில்லாலை
- ஓர் சிறிய சுவர்க்கம்:
இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கே
சூரியன் அஸ்தமிக்கும் இந்துமா சமுத்திரத்தின் கரையில்
சங்கமித்திரை வந்து இறங்கிய சம்பில்கடலுடன் ஆரம்பமாவது
சில்லாலை "சின்னறோமை" என
செல்லமாக அழைக்கப்படும் அழகிய கிராமம்.
இதன் அயல் கிராமங்களாக மாதகல், பண்டத்தரிப்பு,
வடலியடைப்பு, சுழிபுரம் என்பன உள்ளன. கிறிஸ்தவ
மக்களை பெரும்பான்மையாக கொண்ட சில்லாலை, இந்துமத்தவர்களையும்
அரவணைத்து, வேளாண்மை, மீன்பிடி போன்றவற்றை
தமது
முக்கியதொழிலாகவும்
கைத்தொழில், வர்த்தகத்தில் சிறந்தும்
வாழ்கிறார்கள்.
வனப்புறு
பனை,
தென்னை
சோலைகள்
செறிந்து,
நெல்வயல்கள்
நிறைந்து,
மா,
பலா,
வாழை, முக்கனிதருமரங்கள்,
வெண்காயம்,
மிளகாய்,
மரக்கறி
நிறைந்த
இடமாக
இக்கிராமம்
அமைந்துள்ளது. கொழுந்து, கமுகு முக்கிய
வீட்டு தோட்டங்கள் குறைவறக்கொண்டு
ஒருகாலத்தில்
முந்திரிகை செய்கையில் தனிப்பெயர் பெற்று
தடம்பதித்துள்ளமையும் குறிப்பிட்த்தக்கது. இதனால்தான்
"செங்கதிரோன் ஆட்சி செலுத்தஏலா செறி சோலை கொள்
சில்லாலை" என்று அக்காலத்தில் கவிஞர் ஒருவர்
பாடிப்போந்தார்போல.
1687
ஆண்டு
பிச்சைக்காரவேடத்தில்
யாழ்ப்பாணம்
வந்து
இறங்கிய
முத்திப்பேறு
பெற்ற
யோசவ்வாஸ்
அடிகளாருக்கு
சில்லாலை மக்கள்
புகலிடம்
வழங்கி
அவரின்
வழிநடத்தலுடன்
ஆன்மீகப்பணியை
தொடர்ந்தார்கள்.
சில்லாலையின் முதல்
பங்குத்தந்தை
வணக்கத்துக்குரிய
யோசவாஸ்
அடிகளார்
ஆவார்.
இன்று
இலங்கையில்
ஒரு
புனிதர்
என்றால்
அது
யோசவாஸ்
அவர்களே.
எல்லோரும்
எமது
கிராமத்தை
"சின்னறோமை"
என்று
அழைப்பார்கள்.
இன்று
அதற்கேற்ப்ப
எம்கிராமம்
34க்கு
மேற்பட்ட
குருமார்களையும்
40க்கு
மேற்பட்ட
கன்னியாஸ்திரிமார்களையும்
10க்கு
மேற்பட்ட
இல்லறத்தொண்டர்களையும்
இறைபணிக்கு
உவப்புடன்
அழித்துள்ளது.
தற்பொழுது
மலேசியாவில்
பேராயராக
விளங்கும்
மேன்மை
தகு
அன்ரனி
செல்வநாயம்
ஆண்டகை
சில்லாலை பெற்ற
தவப்புதல்வன்.
சில்லாலையின்
மத்தியில்
வானுயர்ந்த
கோபுரங்களுடன்
கெம்பீரமாக
காட்சியளிப்பது
சில்லாலையின் பாதுகாவலியாம்
கதிரைச்செல்வியின்
ஆலயம்.
இவ்வாலைய
விழாவை
சில்லாலை மக்கள் மரியன்னையின் விண்ணேற்பு
விழாவாகிய
ஆவணி 15ந்
திகதி
மிக
சிறப்பாக
கொண்டாடுவார்கள்.
மணியோசையுடன்
கூடிய
கொடியேற்றம்,
திரைப்பாடல்,
விருத்தங்களுடன்
நவநாள்
வழிபாடுகள்,
நற்கருணைப்பவனிப்
பெருவிழா,
கூட்டுத்திருப்பலி,
சரோலைப்பாடல்களுடன்
திருச்சுருப
ஊர்வலம்
என்பன
நடைபெற்ற
பின்,
அன்னதானம்,
விளையாட்டுப்போட்டிகள்,
கலைகலாச்சார
போட்டிகளின்
இறுதியில்
நாட்டியம்,
நாடகம்,
சில்லாலையின் பழமையும்
பெருமையும்
வாய்ந்து
இன்னும்
புதுமையுடனும்,
புகழுடனும்
விளங்கும்
நாட்டுக்கூத்து
சில்லாலையின் கலைஞர்களால்
அரங்கேற்றப்படும்.
சில்லாலை பல்வேறு
துறைகளிலும்
ஆற்றலும்,
திறமையும்
கொண்ட
கலைஞர்களை
தன்னகத்தே
கொண்டுள்ளது.
ஓவியம்,
சிற்பம்,
நடனம்,
பாவைக்கூத்து,
பாவைநடனம்,
கவிதை
புனைதல்,
பாடல்
இயற்றுவோர்,
அண்ணாவிமார்
போன்றோர்
காலத்துக்குக்
காலம்
சில்லாலை
மண்ணிலே
தோன்றியிருக்கிறார்கள்.
அவர்களுள்
இலங்கைப்புகழ்
உலகத்தமிழினப்புகள்
"தான்தோன்றிக்கவிராயர்"
சில்லையூர்
செல்வராசன்
என்று பல புனைப் பெயர் கொண்டு கலை, இலக்கிய உலகில் தனித்துவம் பெற்ற
மரியதாஸ் செல்வராசன் சில்லாலையின் தவப்புதல்வன்.
இவர்
இலக்கிய உலகில் நம்மூருக்கு
தனிப்
பெரும்
புகழையும்,
பெருமையையும்
பெற்றுத்தந்தவராவார்.
"எல்லோரும்
கைவிட்டால்
சில்லாலை
வைத்தியம்"
எங்களுரின்
பாதுகாவலியாம்
கதிரைத்தாயை
மருந்து
மாதா
என்றும்
அழைப்பார்கள்,
அதற்கமைய
அநேக
பரம்பரை
வைத்தியர்கள்
உள்ளனர்.
நாடிபார்த்து
வருத்தத்தைக்
கண்டறிந்து
வாகடம்
ஏடுபார்த்து
மருந்தறிந்து
மூலிகைகள்,
தாவரஇலை,
பட்டை,
வேர்
போன்றவற்றைக்
கொண்டு
வருத்தத்தை
மாற்றும்
சித்த
ஆயுள்வேத
வைத்தியர்
பலர்
உள்ளனர்.
குழந்தைப்பிள்ளை
வைத்தியத்துக்கு
தலைசிறந்த
வைத்தியர்கள்
உள்ளனர்.
10
தலைமுறை
தாண்டிய S. P.
இன்னாசித்தம்பி
பரம்பரை, S. P.
அத்தனாசியார்
வழிதோன்றல்கள்,
இலங்கையின்
புகழ்மிக்க
வைத்தியர்களாக
இருந்து
இன்று
உலகளாவிய
ரீதியில்
வைத்திய
துறையில்
பெருமையுடன்
விளங்குகின்றனர்.
மேளி
செல்வத்தை
உச்சமாக
மதித்து
அதில்
நிலைத்திருந்த
எமது
கிராமம்
கல்வி
செல்வத்திலும்
மேம்பட்டு
விளங்குகின்றது.
பொறியியல்துறை,
வைத்தியத்துறை,
சட்டத்துறை,
கலைத்துறை,
முகாமைத்துவத்துறை,
கணக்கியல்துறை,
கணினித்துறை
போன்றவற்றிலும்
திறமைமிக்கபலரைக்
கொண்ட
சில்லாலை
இப்போ
இலங்கையிலும்
வெளிநாடுகளிலும்
அவர்களின் ஆற்றலை ஆதாரமாக கொண்டுள்ளமை பிறிதொரு
வெற்றியாகும்.
1950களிலிருந்து
சில்லாலையில் கிராம அபிவிருத்தி சங்கத்தையும், புனித
சூசையப்பர் வாலிப சங்கத்தையும் ஆரம்பித்து வழிநடாத்தி
ஊரின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்ட திரு. நீ.
யேம்ஸ் ஆசிரியரையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.
இன்று
எம்மூர்
யுத்துமேகம்
சூழ்ந்த
இடமாக
காட்சியளிக்கின்றது.
வனப்புறு
செல்வங்கள்
அழிந்த
நிலையில்
மக்கள்
அனைவரும்
இடம்
பெயர்ந்த
நிலையில்
பற்றைகள்
நிறைந்தகாடு
போல்
கட்டிடங்களின்
இடிபாடுடன்
காட்சியளிக்கின்றது.
இன்று
எம்மூரில்
எத்தனையோ
வீரர்
எம்மண்ணின்
மீட்பிற்காய்
மாவீரர்களாகியும்
மண்ணைக்
காக்க
களத்திலே
போராடியவண்ணமும்
இருக்கிறார்கள்.
எம்மூர்மக்கள்
இன்று
அகதிகளாக
வன்னியிலும்
உலகம்
முழுவதிலும்
புலம்பெயர்ந்து சிதறுண்டு
இருக்கிறார்கள்.
இவ்வளவு
பெருமைகளையும்,
ஆற்றல்களையும்,
திறமைகளையும்
கொண்டுள்ள
எமது ஊர்
இன்று
களை
இழந்து
காணப்படுவது
தவிர்க்கமுடியாததாக உள்ளது.
வளர்க
சில்லாலை
வாழ்க
எம் நாடே...
|
|
Designed & Maintained By Alan Navaratnam.
Thank You For Visiting My Site. Please Visit Again !
Please send us your comments, suggestions and criticisms.
© Copyright 1998-2005 Sillalai Web Server, All Rights Reserved.
|
|
|
|
|