Home Home Contact Us Contact Us Download Download Wallpapers Wallpapers Animations Announcements About Us About Us


History
Church
Forum
Lyrics in Tamil
Songs in Tamil
School
Gallery
Sign Up
Prayers in Tamil
Members
Holy Bible
Cool Links
Map of Sillalai
Attractions
Joseph Vaz
Webmaster
Sillalai Shrine
Organization
Community
Guest Book

L O G O

"Let them praise his name in festive dance, make music with tambourine and lyre."
Psalms 149:3.


"ஒரு முறை பாடுவது இரு முறை ஜெபிப்பதற்க்கு சமம்"

Sillalai Lyrics - "Songs in Tamil"

 

கர்த்தர் பிறப்புத் திருநாளில்.

தரு.

பல்லவி:
அந்தரங்கமாக வந்த நீர்
ஆர் சொல்லவேணும்
யேசையரோ காணும்.

சரணம்:
இந்தப்பாதி ராவினிற் பரமசேனைகள் பாடுவதேதோ
சோதியாய்ப்புல் மிசைதுயில்கின்ற சூட்சமுமேதோ
அத்தைச்சொல்ல லொண்ணாதோ - அந்த

கோபாலரமுதோடுவந்தும்மைக் கும்பிடுகிறார் - நல்ல
குவளை விழியாள் அன்னைமரிமடி கொம்மையுண்ணுகிறீர்
குறு நகையும் கொள்ளுகிறீர் - அந்த


தரு.

பல்லவி:
ஆதியந்தமில்லாத பரம் பொருளிந்த
மாதுரந்தனில் மமுவானாரதிசயம் - ஆதி

அனுபல்லவி:
ஆதியு மந்தமு மில்லாவனாதியாய்
ஆளப்புவி மீழப்பவ மாளக்கதிநீள - ஆதி

எச்செகமும் புகழ் உற்றிடுகனிமரிபால்வரு
அச்சுதனார்தன் யெகொவாவினொருமைந்தன்
தச்சனிவனொரு பிச்சனென்றே பேசத்
தானபதிவானோர் கலைமேனோர் துதிமோனாதிபர் - ஆதி

நீதி நிறைந்திடும் நித்திய நிருமலனிந்த
பாதிராவில் மனு பால கனாய்வந்து
தாதை பரஞ்சுதன் ஆவியொன்றாம் யேசு
தாசன் அனுகூலன் அதிநேசன் மனுவேலனிவர் - ஆதி

உம்பர்குழாங்களோ டிம்பருளம்மென்ன
சம்பிரமமாய் வரு மன்பேதந்தருளென்ன
தம்புருதாரசங் கீதம் வீணைகுழல்
தந்தனதன மென்றொருவ வந்தன மெனநின்றழுக - ஆதி


வெண்பா.

வில்லிருபத்தைந்திலா மெல்லனையாம் புல்லணையில்
கொல்லுவினை வெல்லவரு குமரனாய் - நல்லணையான்
தந்தான் முன்
னோவைபுரி சாபமறப் பூவுலகில்

வந்தாரிதோ மகிழ்ந்துபார்


பதம்.

பல்லவி:
இதோ அமலாதிதேவன் வலமமை திவ்ய பாலன்
எமைரட்சை செய்திட வருமொயில் பாரீர் - இதோ

அனுபல்லவி:
இகதுர்ப் பவமகலிட அகநர
ரிதமுற்றுள மகிழெழ வெலியமா
நகரத்திரு மிருகடை குடிலினி
லெனதுட்துயர் தவிர்கன்னி மகவென - இதோ

சரணம்:
சிதம திவ்விய பரநாதன் - இச்
செகம் சலம் சயிலம் சர்வபொருள்களும்
அகம் சிதம் சுகமலரணி மணியொளிர்
வகுத்து ஆதமோ டேவையர் பாகலில்
அளித்து வானுற வேயவரால் வரு
பவத்தினா நரராகிய நாமுய
ரகத்திலே யுயராதிபராபான்
வந்துகந்துநற் பதத்தினொளிதரு
மந்து தங்குநற் தவத்திமாமரி
தந்த மைந்தனென் றுதிக்க வானவர்
சிந்துதந்துளம் களிக்கவே மகிழ்.
உலகத்திசை அலர் கமழ் கமழென
வலர் சுற்றெளு வரி சல சல இசை
எழ பெத்தலை இனிதுறு நகைகொள
மழை மெத்திமா குளிரெள அதிவித
வாடைவீச இருளோட ஆடமயி
லோடுநீடுகுயில் பூவை காடை பலவி
வானுலாவிய கவாரபார கூசீ
கராகுறா வெனவுல் காச பெயரொலிகள்
வளரத்திரு அடி இடையர் கடயிர்
நுரைவைத் தெள அலகைகள் நரகுற
அம்பரத் துதய நிரசனி கரமொளி
தங்குயற் பிரபை உருவர மகிதல
உம்பரத்தினொடு பழிமித முறவுல
கெங்குநற் கருத்துறு மெனவுரையெள
உம்பர்பாட மகிழ் இம்பர் தேடக்கவி
நண்பர்பாட அருளண்டர் கூடக்குணதிசை
அரசர் மூவர் பொன் மிறை புகை கொடுபர
னடியில் வீழ எண்ணிலளவில நவமெள
அனந்தை யோடழவே
அன்னை தாதையர் கலுழ்ந்து வாடிடவே
தாதை சூசை தாலாட்ட அன்னைபாலூட்ட
இவர்க்கன்புசூட்ட பாலன் நகைகாட்ட, இருவரும்
அன்றலர்ந்து புல்லணையினில் மனுவடி
வென்று கந்துநல்லனைதர அடியர்மேல்
கொண்ட அன்புடன் குடிலினில் மிருகசெந்
தண்டை வந்துசிறு குழந்தையாகவே - இதோ


பதம்.

பல்லவி:
கருணாகரனே பரம ஈசுரனே
கனிவினை தீர்க்கவந்த
தனிமுதல் யேசுநாதா - கரு

சரணம்:
பரனாதியிலே திருவாய்மையிலே
பெருகுவிந்தை யினோடு மகத்வசந்தோஷம் நீடு
பரிவுடனே யறுதின மதிலேயுயர்
பரமுள யாவையுமருளிய நேரம்
பாருலகந்தனி லோர் மனுடன்தனை
யேவையரென்றொரு பாவையுடன் செய
படர்ந்த காவிடை இரண்டுமரந்தர
அடர்ந்த சீவிய நன்நெறி வென்றொரு
பழத்திலே பொசியாமல் விலக்கின
வழிப்படாது பிசாசுடை சொற்படி
பாவையருந்தின தீவினையால் நரர்
தாவீதுசேயெனும் நேயகுணாநிதி - கருணா


தாலாட்டு.

ஆரிரம் ஆரிரம் தேவபாலா "4 தரம்"

ஆதிபிதாச் சுதன்பிறந்தார் - மோட்ச
ஆனந்தக்கதவு திறந்தார்
மாதுகன்னி வயிற் றிருந்து - தேவ
பாலன் மனுவாகப்பிறந்தார் - ஆரிரம்

மார்கழி திங்களினிர வில் - கன
மாரி பெய்யுங் காலக் குளிரில்
பாரிடையர் சிறுகுடிலில் - தேவ
பாலன் மனுவாகப் பிறந்தார் - ஆரிரம்

தீர்க்க தரிசனர் தீட்டி - வைத்த
தெய்வீக வாக்குண்மை காட்டி
பார்க்குள் மலைவெல்லை நாட்டில் - தேவ
பாலன்  மனுவாகப்  பிறந்தார் - ஆரிரம்


கர்த்தர் உயிர்ப்புத் திருநாளில்.

தரு.

பல்லவி:
ஞானோதய வானாதிபரன்தரு - திரு
நம்பரனுய்ந்து எழுந்தன ரல்லேலூயவே

அனுபல்லவி:
வானோர் தொழுமா கன்னியாஸ்திரி
மைந்தனரிந்தரை உய்ந்திடவந்து
வரந்தருமேகபுரந்தரரானார் - ஞானோ

சரணம்:
அதனுகர் தரவரு அழிவுறு பழவினை தீரவே - வந்த
அரிவையர்சிலர் பரிமளவிரையுடனயல் சேரவே
கதிபெறுசீடர்களதிபிரிய மொடுகளிகூரவே - ஐந்து
காயமதுலவிய துயவன் ஞாயிறு வாரமே
நிலைபெறு மறையுண ரதிவித ரணமிகு
நிதிகெடவருளிய பெலவரமுடனே
உதயனோடெழுதின கரனெனவுடலுயி
ரொடுவளம் பெற எழுந்தனராலேலுய்யா - ஞானோ

வயமுறுவெற்றிக்கொடி விருதொடுகுருசாடவே - விண்ணின்
வாழ்நவசம்மன சோர்ச்சங்கீதம் பாடவே
அயலுறவருமரிய மதலேன் தரிசனை நீடவே - பூவின்
அளவில் பல்சனர்களு முள மகிழ்வொடு கதிநாடவே
இயல்வுறுமுனிவர ரனைவருமெழுதிய
எழில் மிகுமொழியிலோர் வழுவறமுழுவதும்
இசைவுற நமதுகை வசமெ முகிவுசெய்
தெமதிடரற எழுந்தனராலே லூய்யா - ஞானோ

மேதகுதாதை மூதாதை முன்னேர் சிறை மீளவே - வஞ்ச
மேவியவலகைகள் தீயுமிழ் நரகினிலே வீழவே
ஏதமில்மாதர்கள் ராசேஸ்பரிநீர் வாழ்கவே - எங்கள்
ஏககிர்பாகர யேசு உய்ந்தாரல்லேலுய்யவே
வேதனை தருமொரு மாகுரி சினிலுயிர்
வீவரமுடலை நல்லா யொருகல்லறை
மீதிடயமபுர வாசகர்கள் நிலைகெட
வீரபராக்கிர்ம மோடமராடியே - ஞானோ


கலிப்பா.

கங்குல் தனில் நடுச்சாம நேரந்தன்னில்
கர்த்தன் கல்லறை விட்டெழுந்தே
அங்குமகா சனசாலை ஆயதுயர்க் கடலழுந்தும்
அன்னையரைத் தரிசித் தலாகி
தங்குமனங் கொந்தளித்துத் தயங்குமப்போஸ்
தலர்க்கே காட்சி தந்து
உங்களுக்கே சமாதான மீந்திடவே
வல்லபரனிங்கெழுந்தார்லேலுய்யா
எனப்பகர்ந்தனனே


பதம்.

பல்லவி:
தேவதெய்வீக பரநாதன் மரித்த மூன்றாம்
தினத்திலுதித்தார் பாரீர்
இச் செகநரருய்யத் - தினத்

அனு பல்லவி:
காவினிலா தியாத மேவையர் செய்த பாவக்
கசடற் றிடநற் றடமிட டுயிர்விட்
டுடல் கப்பறையிட் டிடநரர் கதியுற
அத்தசாம முய்திட வருசுடரென
மெத்து கூளி கொத்தள மழி குருபரன்
யுத்தமாடி நற்செய விரு தொடுமுயிர்
பெற்றார் பாரீரிற்றிரவினில் மகிழெழத் - தேவ

சரணம்:
பூவக மகிழ்சேர ஆகமம் நிறைவேறப்
போதுகல்லறை தேவதூதன் வல்லபமாக
புட்கநற்கரத் தொருகுரி சொருகொடி
மற்றநற்கரத் திருவிரலொருவடி
வொக்க அற்புதப் பிரபை செறி அமலனு
யிர்க்க யூதர்திக்கென விழவுலகெலாம்
சங்கீதராகம் பாட இங்கீர்தமிர்தங்கூடத்
தாசர் நல்வழிதேடவேயலகைகளோடத்
தருநற்தயிலத் தொடுநற் தவமெத் தியமூஸ்திறி அமலன்
தங்குகல்லறை சென்று அங்கவரில்லை யென்றும்
தானிதோ கலிலேய ஊர்க்கெளுந்தாரென்றும்
அங்குதங்குசெங் கபிரிகேல் சொலமகிழ்
பொங்கு இங்கிர்தஞ் செறிதவ மடவர்கள்
எங்கையெங்கையென்றிட அளவில பரன்
எங்களன்பு கொண்டிடு கன்னிமரியைமுன்
எய்தித்தவ கன்னியர் சீடர்முன்
எய்தக்குரு அடிதொழ உலகெலாம்
எங்குமன்பு கொண்டிடு நவமெழுமலர்
பொங்குபங்கயத் தடமலரளியினர்
ஆடித்துதிபாடித்துருகின
மோடித் திரளாகச் கூடி
அந்தரத்துயர்ந்தலர் கல கல கல
வென்றுகந்தவித்துல கொருவியனெழ
வந்துயிற்றரென்றடியர்களடி தொழ
வென்றொடிந்த நற்சுடர்விட இருள்கெட,
ஏகப்பிரகாசஞ் செய்யத் தாதிமித்தோதெய்ய
தாதத்திமி தாளம் பெய்யத்தாவும் வினைகள்நைய
தத்திமித்திமித்தொலி பல முரசதி
ரத்திறீத்துவத தொருகடவுளன்வடி
வைத்தரித்து இத்தரையினிலெமையிரட்
சித்துயிற்ற ரென்றிரவினில் மகிழெனத் - தேவ


தேவாரம்.

பூமலிகாவிடை மனதிற் பொலிந்த நோவும்
பொற்கரத்தைக் கட்டிவரிந்திட்ட நோவும்
காமிகள் சங்கிலியுறுத்து கழுத்துநோவும்
கன்னமதிற் கையடியாற் கன்றுநோவும்
தோமகல் செங்கால் கரத்தைத் துளைத்தநோவும்
தூயதிருவிலாப் புறத்தில் தோன்றுநோவும்
நேமிவளர் பூமிதனிலிவையேயென்றன்
நெஞ்சினை விட்டொருபோது நீங்கிடாடதே


பதம்.

குறிப்பு:
(அ. இ. ஒருபக்கம் பாடுவது. உ. திருப்பிப் படிப்பது)

பல்லவி:
பத்திராசனங் கொண்டாரே - யேசுநாயகர்  - பத்தி

அனுபல்லவி:
உ: பத்திராசனங் கொண்டாரே நித்யபரமண்டல
அ: பரிபூரண தரிசொருப ருருவமும் ஒருவரென நிறை பரம பொருள்தனைப்,
இ: பணிந்து எமை ரட்சிக்கத் துணிந்துதிருச்சிலுவைப் - பத்

சரணம்:

அ:

ஏவையதத்தால் வந்த பாவக் குரோத நிர்ப்பந்த

உ:

தீதுக்காவே எந்தை ஆதிக்குகந்த மைந்தன்

அ:

தேவனு மனுவு மொன்றாகி யாவை மரிதன்.
திருவுரத் திலமைந்து,

உ:

மேவுஞ் சிரமகுட மூவரசர் கொண்டாட
விண்ணும் மண்ணும் துதிக்க மண்ணுலகை ரட்சிக்க.

அ:

வெல்ல மலை யருகெல்லைதனில் நடு
அல்லி லொரு சிறு பிள்ளை யெனவெகு

இ:

மிருக மடை குடிலதனில் வரமிகு
தறுகண லகைகள் நரகிலடை பட,

உ:

மெய்ப் பொருளென்றுஞ் சிறக்க
பொற் பதியண்டந் திறக்க

அ:

மெஞ்ஞான மறைதளைக்க

உ:

மித்துருபேதக அஞ்ஞான மறையிழக்க

அ:

எச்சேமினிய காவிற் தமததி பிதாவை நினைத்து முளந்
தாளில் நின்று பிரார்த்திக்கும் வேளைதனில்
கிறீஸ்துவே என்று சொல்லித்

உ:

தேவதூதன் பிரலாபித் தாறுதல் சொல்லக்

உ:

குற்றமில்லா நீர்மரிக்க மற்றுயிரெல்லாம் பிழைக்க

அ:

குறித்துப் பரமனுக் கறிக்கை செயத்திரு
வுளத்திற் பொருத்த மென்றுரைக்கவே

இ:

செங்குருதி வேர்வை சொரிய

உ:

நிலமிசை அரிய திருமுகம் கவிழ வீழவும்

இ:

வன்கொலைஞர் வந்துவளைந்து

உ:

பிடித்திழுத்துக் கரங்களைக் கூட்டிக் கட்டி

இ:

ஆனாசு

உ:

வீட்டிற் கொடுபோய் விட்டுப் பல பல அவமானம்

இ:

வருத்தித் திருச்சிலுவை பாரத்தைச் சுமந்திக்கல்
வாரி வெற்பில் நடத்திப்

அ:

பங்கயப் பத சேர்வையோடிரு
செங்கை யைக் குரிசானதிற் செம்
பாணியோடுறப் பூணு மூன்றிருப்
பாணியா லறைந்தார்

இ:

விண்ணோர் பணி

உ:

பரமதிறீத்வ கர்த்தன் திருமரணத்தையுற்றுப்

உ:

பாவியாமெமையு மற்றும் சீவாத்மாவைரட்சிக்கப் - பத்திரா


தரு.

பல்லவி:
மாதா அனுபவித்தவாதை பெரிதென்றெண்ணி
மறுகி நொந்தழுதுறுதி கூருங்கோ - சதாகாலமும்
மனதுநொந்தழுதுறுதி கூருங்கோ

அனுபல்லவி:
சோதித் திருவுளத்தின் திருவினையாகிய
தொக்கும் படிக்கரிய துயர்க்கடல் மூழ்கி
வேதம் நறைகமழ் வெத்தானியா வேகி
விடைதருவீரென்று மிகவன்பதாகி
மினவவருபொழுதினிலு மனதில்வாள்
முளையோடுருவிட அனையெம் வியாகுல - மாதா

சரணம்:
வரோதமுற்றிடுபகைஞரன்றதுவும் - முப்பதுவெள்ளி
விலைபொருந்தியுதேசு விற்றதுவும் -
குரோத அபகடமுத்தமிட்டதுவும் - யூதருக்கொப்புக்
கொடுக்கவதர்மர்க ளடிக்கலுற்றதுவும் -
துரையானாஸ் குருமுன்பு மனுமகன் நின்றதும்
சோதிதன் குமாரனோ சொல்லு நீ யென்றதும் -
பராபரனதற்குப் பின்னெதிர் மொழி நவின்றதும்
பரிசுத்த கன்னித்தில் வலுவறை கொண்டதும்
பவளவாயில் நின்றொழுகு சோரிகள்
அளவெதோ வென வழுதுவியாகுல - மாதா

வானின்முகவெளி மங்கலானதுவும் - அருள்மேவுகண்ணை
மறைத்து உன்னையடித்ததா ரெனவும் -
ஞானசூட்சனை கண்டுசொல்லெனவும் - ராநாலுசாமமும்
நாதனுக்கிடையூறு செய்நினைவும் -
ஈனமில்லாது பன்னிருவர்கைவிட்டலும்
இசையா செழுது கசையாலடி பட்டதும்
தூணிலையாயிரச் சின்னடியுற்றதும்
தோள்மேற் கிலுவை சுமந்திடப் பெற்றதும்
தொன்று சுமைகன மென்றுபருவத
குன்றில் விழுவது கண்டு வியாகுல - மாதா

யெருசலே மதவயவர் சூழ்ந்ததுவும் - ஆயுதங்கொண்டு
சிம்பிநடவெனவம்பு கூர்ந்ததுவும்
கொலைசெய்திட அவர்மனது நொந்ததுவும் - பரலோகராயனை
கொல்ல யோசனை சொல்லி வாய்ந்ததுவும்
சிலுவையதனிற் கைகால் அறையுண்டு மாய்ந்ததும்
திருத் தலை கவிழ்ந் திட மரித்துயிரீந்ததும்
சொல்லரும் விலாத் திறந்துதிரப்புனல் பாய்ந்ததும்
சுகீர்தர்க்கு மட நன்மை கதிதன்னிற் சேர்த்ததும்
சுழலுவாருதி யிரு கண்ணீரென
அறிய விருதய முருகி வியாகுல - மாதா


தரு.

சுத்தனே சோதி மிகும் கர்த்தனே காரணனே
இத்தரை மீதினிலே சத்துருவன் வினையால -
விடருற்றே இகமதில் எவரும் கை
விட்லுற்றே இன் பளிப் பாரெனும்
திடனற்றே திகைத்திடுவேளையில்
சுடருற்றோன் திருவிழி
நோக்கியே
தீதணுகா தொரு மாதுரந்தனில்
ஆதிபிதா அருளாலே செனித் துதித்
தாதரை மீது தயாபரமாகியே
ஆவி கொடுத்தனை வோரையும் ரட்சித்த - சுத்தனே

வஞ்சமா யூதர் கூடி தஞ்சமா னோனைத் தேடி
கஞ்சமா மலர் வதனம் துஞ்சிடவே யடிக்க
துயருற்றே துட்டர்களடியினால்
அயர்வுற்றே அங்கமதிர்ந்துமா
வெயர் வுற்ற வேதனை கொண்டு மக்
கயவர்க் கே வசமது ஆக்கிட
தீதுறு மா கொடும் பாதக யூதர்கள்
ஈன மதா யிழுத்தாளு பிலாத் திடம்
ஓதிய குறை நிறைவானதினாலிறை
கோபமதாகி வன் தீர்வைக்குள்ளாகிய - சுத்தனே

சித்திரம் சோஇ சிரசேழ் பத் திருமுள் ளழுத்தி
இத் தரை யாள் பவர்க்கோர் தத்துவம் வேண்டா மோவென்
றிசைவுற் றோர் ஆசனமீந்ததி
நசை யுற்றே மூங்கில் கரம் கொடுத்
அசை வற்றே ஆளுமெனச் சிலர்
வரை யுற்றே வந்து பணிந்து நின்
றாதரை ஆள் மகராசனே வாழ்கவென
றாளொரு தாள் மடித் தேளன மாயுரை
கூறியே முகத்தினில் காறியே துப்பிட
மாறில்லா தேற் றெமக்காறுதலீந்தருள் - சுத்தனே

மாசணுகாத தோளில் மாபாரம் சேர் சிலுவை
கூசிடா தே சுமத்தி குலவும் கல்வாரி மேட்டில்
விரைவுற்றே கால் கரமீர்தளை
சரியுற்றே ஆணிகள் வைத்து மோர்
கரவுற் றோர் நடுவிடம் நாட்டிட
பரிவற் றோன் சிலுவையின் மீதிருந்
தாதிபிதா வினால் ஆகிய யாவையும்
மேதினி மீதினில் ஆகிமுதிந்தது
ஆற்றலில் லாதென ஆற்றுமந் தனைக் கரத்
தேற்றிடு மென வுயிர் நீத் தெமைக் காத்தருள் - சுத்தனே


சந்தவிருத்தம்.

காவினிலேயதம் ஏவை புரிந்தவன்
பவவினையாலுல கோர்
பரகதி பெறல் அரிதரிதென ஆதியின்
திவுருளத்தை உணர்ந்தே
மாதய வுடனொரு மாதுரந்தனில்
மனுவுருவாய்ச் செனித்தே
மாடை சிறுகுடில் ஆனதிலே லோக
இரட்சகனாயு தித்தே
பூமியிலீனர் செய் பாவமனைத்தையும்
புயமதிலே சுமந்தே
புகிலருங்கதி உலக வர்களும் பெறவழி
இதுவெனேழுரைபகர்ற்தே
ஆவிகொடுத்தனை வோரையும் ரட்சை செய்
தாண்டிடுமம் பரனார்
ஆதியுரைப்படி யோது மூன்றாந்தினத்
துயிர்த்தன ராலேலூயா


விருத்தம்.

பூங்காவிலே ரத்த வேர்வை யுஞ் சிந்தினீர்
பூமியிற் புரள வீழ்ந்தீர்
போற்றரிய தூதனாற் தேற்றரவடைந்த நீர்
புன்னீசர் வசமாகினீர்
ஆங்காரர் கன்னத்தடிக்கப் பொறுத்த நீர்
அங்கிதனை மேற்போத்த நீர்
ஐயாயிரச் சில்வா னடிகளாற் களைத்த நீர்
அதிகமாய்ச் சோர்வுற்ற நீர்
தாங்காத முள்முடி சிரசிற் பொருத்தி நீர்
தான் மூங்கில் கரம் பிடித்தீர்
சாற்றரிய சிலுவை கையேந்தித் சுமந்துநீர்
தறை பட்டுயிர் விட்டநீர்
நீங்காத கைகால் விலாவினாற் சிலீரிட்டு
அதிக ரத்தம் சிந்திடும்
உமதுதிரு ஐந்துகாயத்தை என் சிந்தையிற்
பதித்தருளுமென் யேசுவே


விருத்தம்.

கட்டுண்ட கயிறுடன் சங்கிலி சவுக்குடன்
கனமான சிலுவையுடனே
கழுமுடி பதித்த சிரசலைய வொண்ணாமலே
கல்வாரி மாமலைக்கு
வெட்டுண்ட புண்ணுடன் தொய்வோடிளைப்புடன்
மெல்ல அடிவைத்து அந்த
வீதிதனில் மூவிசை விழுந்து என்பாவத்தை
மீளவென்றே நடந்தாய்
மட்டுக்கடங்காத உடலுயவு பெருகியே
வழி நீளம் உதிரமொழுக
மாதாவு மழுதுநின் திருமேனியாலே
வழிந்த செங்குருதி கண்டு
பட்டதுயர் இத்தனை பொறுக்கமுடியாதெனது
பாவகுற்றம் பொறுத்து
பாதரவிந்த மலர் தா தா எனக்குனது
பரிசுத்த மரிபாலனே


Designed & Maintained By Alan Navaratnam.
Thank You For Visiting My Site. Please Visit Again !
Please send us your comments, suggestions and criticisms.
© Copyright 1998-2005 Sillalai Web Server, All Rights Reserved.