Home Home Contact Us Contact Us Download Download Wallpapers Wallpapers Animations Announcements About Us About Us


History
Church
Forum
Lyrics in Tamil
Songs in Tamil
School
Gallery
Sign Up
Prayers in Tamil
Members
Holy Bible
Cool Links
Map of Sillalai
Attractions
Joseph Vaz
Webmaster
Sillalai Shrine
Organization
Community
Guest Book

L O G O

"Persevere in prayer, being watchful in it with thanksgiving;" Colossians 4:2


"தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள்." கொலோசையர் 4:2.

Prayers in Tamil

"ஓ பரிசுத்த சிலுவையே, எங்கள் இரட்சணியமே வாழ்க."

 

திரு இருதயச் செபம்: 

பரலோக பூலோக மனனாவே,

சீவியந்தரும் திவ்விய அப்பமே பாவிகள்

நாங்கள் உம்மை நமஸ்கரித்து

ஆராதிக்கறேம்.

மனுக்குலத்தின் மீது கொண்ட

மட்டற்ற அன்பினால் மதிப்பிட முடியாத

உமது மாசற்ற திரு உயிரை

எங்களுக்காகச் சிலுவை மரத்தில்

பலியாக்கிய பின்னும் பாடுகளின் பலனை

மனிதர் அறியாது பாவத்தில்

விழுகிறார்களே என்று கருதி திவ்விய

நற்கருணையை ஏற்படுத்தி எங்களுக்காக

இரவென்றும் பகலென்றும் பாராது

விழித்துக் காத்திருக்கும் திரு இருதய

நாதரே, கவலையால் நிறைந்து

கண்ணீரால் கலங்கி வேதனையால்

வருந்தி நொந்த உள்ளத்துடன் பாதை

தெரியாப் பாலகர் போன்று பாவிகள்

நாங்கள் உமது நேச இருதயத்தின்

வாசலண்டைவந்து வீழ்ந்து

கிடக்கின்றோம், ஐயோ, இரக்கம் சுரக்கும்

இருதயமுடைய யேசுநாதரே, எங்கள்

அழுகையைத் துடைப்பார் யாருமில்லை;

தாகந்தீர்ப்பார் யாருமில்லை; தரித்து

நிற்க நிழலளிப்பார் யாருமில்லை. தாங்க

முடியாத வாதனைகளையும்

சோதனைகளையும் தாங்கி உம்

மண்டையே வந்து உம்மை நோக்கி

கூக்குரலிடுகின்றோம். ஆ! அன்பு நிறைந்த

ஆண்டவரே, ஆதரவளிக்கும் கர்த்தாவே,

அன்பிற்காய்ப் பிறந்து அன்பிற்காய்

அவதிப்பட்டு உமது ஆருயிரை

எங்களுக்காகச் சிலுவை மரத்தில்

துறந்தீரே; அவனியில் எங்களுக்கு அன்பு

செய்ய ஆறுதலளிக்க யாருமில்லையே

என்று அவதியுறும் நாங்கள், அன்பு

நிறைந்த உமது இருதயத்தை நோக்கி

கதறி நிற்கிறேம். கருணை நிறைந்த

இருதயமே, உருகி நிற்கும் எங்களைப்

பாரும், கடைசித் துளி இரத்தத்தையும்

எங்களுக்காக ஈந்த இறைவா

பூங்காவனத்தில் நொந்து வருந்தின

யேசுவே, திரு இருதயநாதரே உமது திரு

இருதயத்தை மென்மேலும் வருத்தும்

நாங்கள் யாரிடம் போய் ஆறுதல்

அடைவோம். உம்மையல்லால் எம்மைத்

தேற்றுவார் யாருண்டு. ஆற்றுவார்

யாருண்டு அரவணைப்பார் யாருண்டு.

ஆறுதல் தருவார் யாருண்டு எங்கள்

அடைக்கலமும், நம்பிக்கையும்

நீரல்லவோ, ஐயோ இரக்கத்தின்

இருதயமே எங்களைப் பாரும். எங்கள்

குடும்பங்களைக் காரும் எங்களைச்

குழ்ந்துள்ளள கஷ்ட துன்பங்களைத் தீரும்.

உமது ஆறுதலை அடைக்கலத்தை

அண்டிவந்தோம். எம் மீது கருணை

கூரும், உமது நேச அழைத்தலைப்

புறக்கணிப்போர் உம்மை நாடிவர அருள்

புரியும். உமது இரக்கத்தை

இறைஞ்சுவோர்மீது இரக்கமாயிரும்

தங்கள் மன வேதனை தாங்காது அண்டி

வந்தோர்க்கு ஆறுதலைக் கொடுத்தருளும்

வியாதியால் வருந்துவோரை ஆசீர்வதியும்,

அந்தரித்து வந்தோரின் அழுகைக்

கண்ணீரைத் துடையும். உமது சிநேக

இருதயத்தின்மேல் மானிடர் மென்மேலும்

சிநேகம் கொள்ளவும் உமது திருஇருதய

பத்தி மென்மேலும் அதிகரிக்கவும்

செய்யும். உமது நேச வேண்டுதலுக்கு

இசைந்து உமது இருதயத்துக்கு ஆறுதல்

தர ஆசிக்கும் எங்கள் மன்றாட்டுகளுக்கு

இரங்கியருளும், பாவிகட்காய்ப் பலியான

திரு இருதயநாதரே, எங்கள்

அனைவரையும் பாதுகாத்து ஈட்டியால்

துளைளயுண்ட உமது திரு இருதயத்தில்

நின்று சொரிந்த கடைசித்துளி

இரத்தத்தாலும் தண்ணீராலும் எங்களை

அபிஷேகஞ் செய்து உமது திரு

இருதயத்தண்டை சேர்த்தருளும்

கடைசியாய் அன்பிற்குறிய இரட்சகரே,

திரு இருதயமே நற்கருணைநாதரே,

நாங்கள் இந்தத் திருமணி ஆராதனையை

உம்முடைய நேச இருதயத்துக்கு

ஒப்புக்கொடுத்து உம்மை விட்டுப் பிரிய

இருப்பதால் உம்முடைய ஆசீர்வாதத்தை

இரந்து உமது இருதய வாசலண்டை

சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கின்றோம்.

அவ்வாசீர்வாதம் எங்கள் மீதும்

எமக்குள்ள யாவற்றின் மீதும் இருப்பதாக.

ஆமென்.


தொன்மையான செபங்கள்:

சிலுவை மந்திரம் (கொச்சகம்):

அர்ச்சியமா சிலுவையடை யாளமதால்
அவனியிலும் சத்துருக்க ளடர்ந்து செய்யும்
சற்பனையா லெம்மைமரட்சை புரியு மேக
சருவ பரி பூரண மெஞ் ஞானானந்த
தற்பரமா யொப்புவமை செப்பவொண்ணா
தளவழிவில் லாவுசித தயாளரூப
சச்சிதானந்த பிதாச் சுதனிஸ்பிரீத்துச்
சாந்து திரு நாம மதாலாமேன் யேசு.

திரீத்துவ கீர்தனை:

சோதி வானுறை தாதை நற்சுதன் தூய்மை சேர் நேய ஆவியாம்
ஏதிலாத்திரி யேக நாதனுக் கென்றும் ஸ்தோத்திர மாமே.
ஆதியில் ஆனதன்மை யாகவே அன்று மின்று மென்றென்றுமே
மேதகு சதா காலமுமாக மேவி வாழ்கவே - ஆமேன்.

பரமண்டல கீர்த்தனை:

ஏர் செறிபர மண்டலங்களில் இருக்கு மெங்கள் பிதாவே
சீர்செறியும்முடைய நாம மர்ச் சித்திடப் படுவதாக.
தூயவுன் திருராட்சியம் வரத் தூய் மனங் கதியிற் சேரும்
செய்கை போலிச் செகதலத் தினிற் செய்திடப் படுவதாக.
அன்றன்றுள்ள வெம் மப்பமெங்கட் கருளுமெங் கடன் காரருக்
கின்று நாங்கள் பொறுக்குமாப் போல எங் கடன் எமக்கே பொறும்
பின்னுமெங்களைச் சோதனைக்குட் பிரவேசிப் பித்திடாதேயும்
இன்னு மெங்களைத் தின்மையினின்று ரட்சித்துக் கொள்ளு மாமேன்.

கர்த்தர் செபம்:

மேல் மண்டலங்களில் வாழ்கின்ற
எங்கள் பிதாவே
உமது அரிய பெயர் அர்ச்சிக்கப்
படுவதாக
வருக உமது திரு அரசு

உமது விருப்பம் பரலோகத்திலே போலப்

பூமியிலும் நடப்பதாக

நாளைய அப்பத்தை இன்றைக்கே

எங்கட்குத் தாரும்

எங்கள் கடன் காரருக்கு நாங்கள்

பொறுக்குமாப் போல

எங்கட்கும் மன்னிப்பு அருளும்

எங்களைச் சோதனைக்குட்போக

என்றும் விடாதீர்

தீமை யினின் றெம்மை மீட்டு

எடுத்திடுவீரே

மேல் மண்டலங்களில்...


Designed & Maintained By Alan Navaratnam.
Thank You For Visiting My Site. Please Visit Again !
Please send us your comments, suggestions and criticisms.
© Copyright 1998-2005 Sillalai Web Server, All Rights Reserved.